வழக்கறிஞரை சந்தானம் அடித்தது உண்மைதானா? ஆர்யாவின் பகீர் பேச்சு! | Ottrancheithi
Home / சினிமா / வழக்கறிஞரை சந்தானம் அடித்தது உண்மைதானா? ஆர்யாவின் பகீர் பேச்சு!

வழக்கறிஞரை சந்தானம் அடித்தது உண்மைதானா? ஆர்யாவின் பகீர் பேச்சு!

Arya Speech at Sakka Podu Podu Raja
காமெடி நடிகர் வி.டி.வி. கணேஷ் தயாரிப்பில் புதுமுக இயக்கனர் சேதுராமன் இயக்கம் திரைப்படம் “சக்க போடு போடு ராஜா”. இப்படத்தில் சந்தானாம் கதாநாயகனாகவும், வைபவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன், விவேக், சம்பத்ராஜ், ரோபோ ஷங்கர், வி.டி.வி.கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நடிகர் சிம்பு முதல்முறையாக இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவை செய்ய ஆண்டனி படத்தொகுப்பை செய்துள்ளார்.

இப்படத்தின் ற்றைளீர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது, “சந்தானம் காமெடியனாக நடித்தார், பிறகு காமெடி கலந்த படங்களில் கதாநாயகனாக நடித்தார் இப்போது ஆக்ஷன் ஹீரோவாக நடிகிறார் என்கிறார்கள். சந்தானத்துக்கு ஆக்ஷன் ஹீரோ பொருத்தமானது. சமீபத்தில் கூட, அவர் உண்மையிலேயே ஆக்ஷன் ஹீரோவாக நடந்துகொண்டார். அடிச்சவருக்கே இந்த காயம் என்றால், அடிவாங்கியவருக்கு காயம் எப்பிடி இருக்கும்?” என்று ஒரு பிட்டை போட்டுவிட்டு தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.

‘நெருப்பில்லாமல் புகையாது’ என்று நடைமுறையில் சொல்லப்படும் ஒரு வாக்கியம். அப்பிடி பார்க்கும்போது, சமீபத்தில் சந்தானத்திற்கும், வழக்கறிஞர் விவேக் ஆனந்த் என்பவருக்கும் நிலா பிரச்சனை காரணமாக கைகலப்பு நடந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. சந்தானத்தின் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டு, அவர் கைது செயப்படலாம் என்ற காரணத்தினால் சந்தானம் முன்ஜாமீன் பெற்றுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது “சக்க போடு போடு ராஜா” இசை வெளியீட்டில் ஆர்யா பேசுவதை பார்த்தால் உண்மையில் சந்தானம் வழக்கறிஞர் விவேக் ஆனந்த் அவர்களை நன்றாக தாக்கிவிட்டார் என்பது நிருபணமாகிறது.

போறபோக்கை பார்த்தால் சந்தானத்தை, ஆர்யா சிக்கலில் கோர்த்து விட்டாரோ என என்ன தோன்றுகிறது. காரனம இந்த ஆர்யாவின் பேச்சை காரணமாக வைத்து கூட வழக்கறிஞர் விவேக் ஆனந்த் சந்தானம் தற்போது பெற்றிருக்கும் முன்ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. “சந்தானம் வெல்கம் டு கோலிவுட் ஆஸ் ஆக்ஷன் ஹீரோ.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top