சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.

 

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.பல்வேறு குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏராளமான மனுக்களை ஒன்றாக விசாரித்து வந்த தலைமை நீதிபதி அமர்வு, கோவிலின் சனாதான மரபையும் தர்மங்களையும் மதிப்பதா அல்லது பெண்களுக்கு சம உரிமை அளிப்பதா என்பதை தீர்மானிப்பதாக இருந்தது.

தற்போது அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசம் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மற்றொரு தரப்பு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசம் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

11-1497145516-sc

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. சபரிமலையில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெண்கள் மீதான இத்தடைக்கு இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இத்தடை இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்க வேண்டுமே தவிர, பாலின அடிப்படையில் கோயிலுக்கு நுழையவே தடை விதிக்க முடியாது.

எனவே கேரளாவின் தடை அரசியல் சடனத்துக்கு எதிரானது என்பதால் இத்தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று முக்கிய தீர்ப்பு அளிக்கப்பதாக இருந்தது.

மேலும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து நீதிபதிகள் அறிவிக்க இருந்தனர். அந்த வழக்கை தற்போது அரசியக் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Leave a Response