வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களே பணியாற்றும் முதல் மாநிலத்தேர்தல்!

 

201602040616088347_Chennai-Tamil-Nadu-assembly-polls-election-officials-about_SECVPF

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் எனவும், டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.முதன்முறையாக பெண்களே முழுவதுமாக 136 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 22-ந்தேதியுடன் முடி வடைகிறது. இதே போல இமாச்சலபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 7-ந்தேதி முடிவடைகிறது. இதனால் இந்த இரு மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது.

68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் வீரபத்ரசிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2012-ம் ஆண்டு இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 26 இடங்கள் கிடைத்தது.

இந்நிலையில், இங்கு நவம்பர் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக பெண்களே முழுவதுமாக 136 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவார்கள் என்றும் ஜோஷி கூறினார்.

அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில தேர்தல் தேதி திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

முக்கிய தேதிகள்:-

செப்.16-ம் தேதி – வேட்பு மனுதாக்கல்
செப்.23-ம் தேதி – வேட்பு மனுதாக்கல் முடிவு
செப்.24-ம் தேதி –  வேட்புமனு வாபஸ்
செப்.26-ம் தேதி – இறுதி வேட்பாளர் பட்டியல்

நவ.9-ம் தேதி – தேர்தல்

டிச.18-ம் தேதி – முடிவுகள் அறிவிப்பு

Leave a Response