100% காதலோடு வரும் ஷாலினி பாண்டே! கூடவே வரும் ஜி.வி.பிரகாஷ்.

 

100-percent-kadhal_640x480_71500101293

தமிழ் சினிமாவில்  ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்-ன் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜி.வி.பிரகாஷ்  ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட பல  படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன.

அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் 100% காதல்!.தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் தமிழ் ரீமேக்காக ‘100% காதல்’ உருவாகவிருக்கிறது!.

60719877

படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடி ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் கதாநாயகியான ஷாலினி பாண்டே நடிக்கவிருக்கிறார்.  பரிட்சை ஹாலில்  ஷாலினி பாண்டே-வின் இடுப்பைப்பார்த்து ஜி.வி.பிரகாஷ் பிட் எழுதுவதைபோலான  காட்சியோடு பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

30-1506761676-100kaadhal01

 

இந்நிலையில் படத்தின்  படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.     இதில் இயக்குநர் பாரதிராஜா ,நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே, பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா, படத்தின் இயக்குனர் எம்.எம்.சந்திரமெளலி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

100-Kadhal-Movie-Pooja-Photos-Set-2-14

கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 100% காதல் படத்தை தயாரிக்கின்றனர்.

எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். ஜி.வி.பிரகாஷே படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் பெரும்பலான காட்சிகள் லண்டனில் படமாகவுள்ளதாம்!

Leave a Response