அதிகரிக்கும் டெங்கு; தமிழிசை தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படுமா ?

 

xpanneerselvam-modi-14-1502701083-12-1507787048.jpg.pagespeed.ic.6c1aNZkMkr

துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக நலத்திட்டங்கள் பற்றியும் தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பற்றியும் ஆலோசனை செய்வதாக தகவல்.

துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க சென்றதால் மோடியை சந்திக்க முடியவில்லை.

 

இந்த நிலையில் இன்று பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து தனது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி. முனுசாமி , மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் டெல்லி சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இன்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதைப்பற்றியும் பிரதமரிடம் ஆலோசனை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் தமிழிசை தலைமையிலோ அல்லது ஏதேனும் எய்ம்ஸ்  மருத்துவர்கள் தலைமையிலோ  சிறப்பு குழு அமைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா பரோலில் வந்த நாளன்று ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இருந்தார். தற்போது சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு கிளம்பிய நிலையில் மீண்டும் டெல்லி சென்று மோடியை சந்தித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

ஓபிஎஸ்சின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

 

Leave a Response