அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை: கருணாஸ் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டு!

  karunas3x2

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்கள் இல்லை என்று கருணாஸ் எம்.எல்.. குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் எனது உறவினரின் மகள் மற்றும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

அரசு ஆஸ்பத்திரிகளில், டெங்கு பாதிப்புக்கு ஆளாகி 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லை.

மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ வசதியும் இல்லை. எனவே ஆஸ்பத்திரிகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்

Leave a Response