தோற்றால் கல்லெறிவீர்களா? டுவிட்டரில் கொதித்தெழுந்த அஸ்வின்!

ashwin

ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ் மீது கல் வீச தாக்கிய சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது.

இப்போட்டிக்கு பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ் மீது கல் விசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எந்த ஆஸி., வீரரும் காயமடையவில்லை என்றாலும், இதை செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உறுதியளித்தார்.

images

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது டுவிட்டர் பக்கம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்’ நமது நாட்டிற்கு வரும் விருந்தினர்களை மதிப்பு, மரியாதையுடன் வரவேற்கும் பண்பு கொண்டவர்கள் நாம். ஆஸி., அணி பஸ் மீது கற்களை வீசியது மிகவும் மோசமான செயல். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். நம் மக்களிடம் நிச்சயமாக இந்த பண்பு நிறைய உள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response