நாளை மறுநாள் அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் வாபஸ்… பெட்ரோல் பங்க் வழக்கம் போல் இயங்கும்

201706161040387426_d._L_styvpf

 201706161040387426_d._L_styvpf

நாளை மறுநாள் (அக்.13) பெட்ரோலிய பொருள்களுக்கு தினமும் விலை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பங்க் உரிமையாளர் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொண்டு வந்தன. இந்நிலையில் புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் மே 1 முதல் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.

 PETROL

இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலிண்டர் எரிவாயு போல் பெட்ரோலிய பொருள்களுக்கு ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் திட்டத்தை விரைவில் தொடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தன. இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தனர்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் இன்று வாபஸ் பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *