டிக்கெட் விலை உயர்வு , மதுபான விலை உயர்வு ; வெங்காய பக்கோடா விலையையும் உயர்த்த வேண்டியதுதானே எடப்பாடி ?

201703040844321722_Tamil-Nadu-Cabinet-Met-Important-consultation-about-budget_SECVPF

 

தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவி சொல்வதைப்போல இங்கு எல்லாவித செய்திகளுக்கும் ஒரு பெரிய பின்புலம் உள்ளது. மூன்றாம் பக்க செய்திக்கும் நான்காம் பக்க செய்திக்கும் ஒரு தார்மீக தொடர்பியிருக்கிறது.

அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் 20 % ஊதிய  உயர்வுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே மதுபானம் விலையை உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு என அறிவிப்பு வெளியாகிறது.

201703040844321722_Tamil-Nadu-Cabinet-Met-Important-consultation-about-budget_SECVPF

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை ஈடுகட்ட மதுபான விலையை உயர்த்தியிருப்பதாக மறைமுகமாக அறிவித்தியிருக்கிறது தமிழக அரசு.

மதுபானக்கடைகளை முழுவதுமாக மூடி மதுவிலக்கை அமல்படுத்தவேண்டுமென தமிழக முழுவதும் பெண்கள் மற்றும் பல அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் மதுபான விலையை உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

jacto-geo-protest-11-1507710213

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல விஷயங்களை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வும், மதுபானங்களின் விலை உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதை அடுத்து, பீருக்கு 10ரூ வீதமும், குவாட்டருக்கு 12ரூ வீதமும் விலை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தவும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்ப்டடுள்ளது. இதனால அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வுக்கான  ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபானங்களின் விலையை உயர்த்துவதே அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளிப்பதற்கான தொகையை ஈடுசெய்வதற்குத்தான் என்கிறார்கள் அரசு தரப்பைச்  சேர்ந்தவர்கள் .

201703151951465085_Karnataka-CM-Siddaramaiah-abolished-value-added-tax-on-wine_SECVPF

பண்டிகைகளின் போது அரசு மிகப்பெரிய அளவிற்கு டார்கெட் செய்து மது விற்பனையை வருடந்தோறும் பல ஆயிரம் கோடிகள் வருமானம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி நெருங்கிவரும் வேளையில் மதுபான உயர்வை அரசு அறித்திருப்பது அரசு ஊழியர்களுக்கு அளித்திருக்கும் ஊதிய உயர்வை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி அதிகப்படியான லாபம் ஈட்டுவதற்காகவும் சாதாரணமான குடிமக்களை அடகுவைக்கத் தயாராகியிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிப்பது அரசின் கடமை அவர்களுக்கான ஊதிய உயர்வு நிதியை சரிகட்டுவதற்கு அரசு ஏதேனும் மாற்றுத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர சாதரண மக்களின் உணவுப்பட்டியலில் உள்ள ஒரு பொருளின் மீதான விலையை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாமானதாக இருக்காது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *