சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அவதி!

 

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களை காலை முதல் அலைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் கேட்டால் அட்மிஷன் நிறுத்தி வைக்கப்படும் என்று பயமுறுத்துவதாக அங்குள்ள மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

96286b4b-e78e-4974-bf83-047e4a2b611a

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி பயில்வதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்த மாணவர்களுக்கு நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. காலை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்த மாணவர்களுக்கு தற்போது வரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. காரணம் கேட்டால் உங்களின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று மாணவர்களை பயம் காட்டி வருகின்றனர். இதனால் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Leave a Response