இன்றைய முக்கிய நிகழ்வுகள் சில…..

இன்றைய சில முக்கிய நிகழ்வுகள் தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

  • புது வீடுகள் கட்டுமானம் 33% சரிந்தது!

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் புனே, அகமதாபாத் ஆகிய எட்டு நகரங்களில் புதிதாக வீடு கட்டுவது கடந்த ஜனவரி முதல் செம்டம்பர் வரையிலான 8 மாதங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது என குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த 8 மாதங்களில் மொத்தம் 60,140 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில இது 89,970ஆக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

  • பொதுத்துறை நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ!

சாப்ட்வேர் துறை உட்பட பல்வேறு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பிரபல கல்வி நிறுவனங்களில் இருந்து வேலைக்கு ஆள்தேர்வு செய்கின்றன. இது வழக்கமாக டிசம்பரில் நடக்கும். இதற்கு முன்பே நவம்பரில் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐஐடிக்களில் இன்ஜினியரிங் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.  இதற்காக சுமார் 100 பொதுத்துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

AVN_SBI_151721f_jp_1385540g

  • இனி இந்த அடிப்படையில்தான் கடன் கிடைக்கும்?

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சிறு தொழில் நிறுவனங்கள் சமர்ப்பித்த பேலன்ஸ் ஷீட் அடிப்படையில் கடன் வழங்கி வந்தது. இனி அந்த நிறுவனங்களின் ஓராண்டு வங்கி பரிவர்த்தனை அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இந்த வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பரிவர்த்தனையை ஆராய்ந்தால்தான் அவர் கடனை ஒழுங்காக திரும்பி செலுத்துவாரா என்பதை அறிய முடியும் என்றார்.

petrol bank_0

 

  • அதிகமாக கொள்முதல் செய்வதால் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும்: தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

இந்தியாவில் கச்சா எண்ணெய் அதிகம் கொள்முதல் செய்வதால், அதன் விலையை குறைக்க வேண்டும் என ஒபெக் அமைப்பிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (ஒபெக்) பொது செயலாளர் சானுசி முகமத் பர்க்கிண்டோ புதுடெல்லி வந்துள்ளார். அவர் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தார். அப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.  ஒபெக் நாடுகளிடம் இருந்து இந்தியா 86 சதவீத கச்சா எண்ணெய், 75 சதவீத இயற்கை எரிவாயு, 95 சதவீத எல்பிஜி ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. இதை சுட்டிக்காட்டிய தர்மேந்திர பிரதான், ஒபெக் நாடுகளின் முக்கிய பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

கச்சா எண்ணெயை இந்தியா மிக அதிக அளவில் கொள்முதல் செய்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு நியாயமான விலையில் கச்சா எண்ணெயை ஒபெக் நாடுகள் சப்ளை செய்ய வேண்டும். குறைவான விலையில் வழங்க வேண்டும். இந்தியாவின் சமூக பொருளாதார நிலை, மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இதுபோல் அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக 7.85 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சமீபத்தில் கொள்முதல் செய்ததையும், 1.6 மில்லியன் வந்து சேர்ந்ததையும் பிரதான் சுட்டிக்காட்டினார்.

  • புதுச்சேரியில் டெங்குவால் இளைஞர் பலி

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் இளைஞர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோவிலானூரைச் சேர்ந்த அருமைநாதன் என்ற இளைஞர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்கைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

10868133_881765338535095_1477666917628972426_n

 

  • ஐதராபாத்தில் கனமழை: ஏரி நிரம்பி வழிவதால் வீடுகளில் வெள்ளம்

ஐதராபாத்தில் கனமழை காரணமாக ராம்நாத்பூர் ஏரி நிரம்பி வழிகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல படகை பயன்படுத்தி வருகின்றனர்.

 

  • கடலூர் நகராட்சியில் 11 கடைகளுக்கு அபராதம்!

கடலூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 11 கடைகளுக்கு ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நகர் நல அலுவலர் மதனி தலைமையிலான ஆய்வின் போது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய டயர் விற்பனை கடைகளில் இருந்து 3 டன் டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • புதிதாக வெடித்துள்ளது பிளாஸ்டிக் சர்க்கரை !

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி போன்ற சர்ச்சைகள் ஓரளவு அடங்கியுள்ள நிலையில், ஒடிசாவில் பிளாஸ்டிக் சர்க்கரை சந்தைக்கு வந்திருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கோக்சாரா என்ற ஊரைச் சேர்ந்த முஜிகுடா என்ற பெண், கலாஹந்தி சந்தையில் சர்க்கரை வாங்கி வந்துள்ளார்.

அதைக் கொண்டு அவர் தனது வீட்டில் தேநீர் தயாரித்தபோது, சர்க்கரை கரையாமல் இருந்துள்ளது. பிளாஸ்டிக் போலவே இருப்பதாக உணர்ந்த முஜிகுடா, இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். உடனடியாக அதை கைப்பற்றிய அவர்கள், ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவு வந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response