ஐந்து நடன இயக்குநர்களால் ஆடவைக்கப்பட்ட சந்தானம்!

ZF1A5664

VTV கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகிவரும் படம் .

அறிமுக பாடல் காட்சியில் கதாநாயகன் சந்தானம் நடிக்க சமீபத்தில் அது படமாக்கபட்டது. முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.

unnamed (1)

“கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும் காலத்திலே கலங்க நா கோழையில்லே ” இந்தப்பாடலுக்கு சிம்பு இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத் பாடியிருக்கிறார்.  நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கத்தில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு ஆன்டனி பணியாற்றியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங், VTV கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் சிம்பு இசையில் ,யுவன் ஷங்கர் ராஜா , டி.ராஜேந்தர் , உஷா ராஜேந்தர்  ஆகியோர்  பாடல்களைப் பாடியுள்ளனர் . கடந்த நவம்பர் 14-தேதி சத்யம் திரை அரங்கில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் திரை உலகின் பல பிரபலங்கள்  முன்னிலையில் நடைப்பெற்றது.

Leave a Response