2012-ற்குப் பிறகான தொடர் வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?!

WhatsApp Image 2017-10-10 at 11.00.32 AM

 

இந்தியாஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று மாலை இந்திய நேரப்படி 7-மணிக்கு நடக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணிடக்வொர்த் லீவிஸ்விதிமுறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

WhatsApp Image 2017-10-10 at 11.01.25 AM

இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்கள். பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் ஆகியோரையே ஆஸ்திரேலிய அணி அதிகம் நம்பி உள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் போட்டி தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேக்ஸ்வெல் பார்முக்கு திரும்பினால் ஆஸ்திரேலிய அணி வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Image 2017-10-10 at 10.59.59 AM

இந்தியாஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 14 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 10 ஆட்டத்திலும், ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு இந்திய அணி, 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவுகாத்தி பார்சபரா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். எனவே ஆடுகளத்தின் தன்மை எப்படி? இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. புதிய மைதானத்தில் முதல் வெற்றியை ருசிக்க இந்திய அணி ஆர்வம் காட்டும். கவுகாத்தியில் நேற்று லேசாக மழை பெய்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருப்பதால் போட்டி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, மனிஷ் பாண்டே, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், நெஹரா, தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜாசன் பெரென்டோர்ப், டேனியல் கிறிஸ்டியன், நாதன் கவுல்டர்நிலே, ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ், கிளைன் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், கனே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆன்ட்ரூ டை.

Leave a Response