அமித்ஷா மகன் மீது ஊழல் புகார்: சாட்டையை சுழற்றுகிறது காங்கிரஸ்!

Tamil_Daily_News_99333918095

அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடைபெற உதவியாக, பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அமித்ஷா விலக வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அமித்ஷா மகன் ஜெய் ஷா குறித்து, ‘தி வயர்’ என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெய் ஷா நிறுவனம் பணம் ஈட்ட சலுகை காட்டப்பட்டதாக அந்த கட்டுரை விரிவடைந்தது.

இந்த நிலையில், கட்டுரை பொய்யானது என கூறி, வெப்சைட் மீது வழக்கு தொடரப்போவதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி இப்பிரச்சினையை விடுவதாக இல்லை. காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா, டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், “ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எதற்காக, ஜெய்ஷாவுக்கு ஆதரவாக பேட்டியளித்தார்? அவர் அமைச்சரா அல்லது ஜெய்ஷாவின் செய்தித்தொடர்பாளரா?” என கேள்வி எழுப்பினார்.

anand-sharma-story_650_031914093629

மேலும், பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார் என்றும் ஆனந்த் ஷர்மா கேள்வி எழுப்பினார். பாஜக தலைவர்களாக இருந்த அத்வானி, பங்காரு லட்சுமணன் போன்றோர், தங்கள் மீது புகார்கள் வந்தபோது பதவி விலகியுள்ளதை ஆனந்த் ஷர்மா சுட்டிக்காட்டி, அதேபோல இப்போது அமித்ஷா தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதுதான் நல்ல வகையில் விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதாக அமையும் என்றார்.

modi13

ராகுல்காந்தியும், பிரதமர் மோடியின் மவுனத்தை டிவிட்டரில் கேலி செய்துள்ளார். அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து மோடி பதிலளிக்காமல் இருக்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

 

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், லஞ்சம் வாங்க மாட்டேன், யாரையும், லஞ்சம் வாங்கவிடவும் மாட்டேன் என மோடி கூறியதை நினைவூட்டி, இந்த விவகாரத்தில் மோடி பதிலளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Response