போதையில் கார் ஓட்டிய வழக்கு நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

மதுபோதையில் காரில் சென்று விபத்து ஏற்படுத்திய ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், மது அருந்தி விட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

1506132816-1554

இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். நீதிபதி முன் மதுபோதையில் தான் விபத்தை ஏற்படுத்தியதாக ஜெய் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஜெய்க்கு ரூ. 5200 அபராதமும், 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response