இந்திய குடிமகனின் அடிப்படை பேச்சுரிமையை தடுக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

காட்சி ஊடகங்கள், செய்தி ஊடகங்கள் தாண்டி இன்று மக்கள் மத்தியிலும், இளைஞர்களிடத்திலும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது சமூக ஊடகங்கள் தான். சமூக ஊடகங்கள் நவீன இந்தியாவின் கட்டுப்பாடற்ற, அளவற்ற சுதந்திரங்களை அள்ளித்தரக்கூடிய ஒரு மீடியம். அங்கு உலகின் பெரும் தலைவர்கள் தொடங்கி ,சாமனியன் வரை யாரும் விமர்சனங்களில் இருந்து தப்பமுடியாது.

இப்படிப்பட்ட சூழலில் தான் சமூக ஊடகங்களில் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதால் அதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தல், தலைவர்களை விமர்சித்தல் , மற்றும் தவறான தகவல்களைப்பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவ்விதசெயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு – 66(A) என்ற புதிய சட்டத்தினை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. அந்த சட்டப்பிரிவினை செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

supreme_court_38

 

 

தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது என கூறியுள்ளது.

ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு – 66(A) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதை பல வாட்ஸப் குரூப் அட்மின்களும் , பேஸ்புக் பயனாளர்களும்  சேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Response