தழும்பை மறையச் செய்யும் உருளைக்கிழங்கு! ஆச்சரிய ஆரோக்கியச் செய்தி

potato-stew

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து நன்றாக பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி கலந்து முகத்தில் பூசுங்கள்.
சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் தழும்புகள் மறைந்திடும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து அதனை பேஸ்ட்டாக நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பூசினால் இயற்கை ப்ளீச் தயார்.
இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் கழுவிவிடலாம்.

முகத்தில் தோன்றும் பரு அல்லது பருத் தழும்புகள் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்பட்ட நிற மாற்றத்தை சரி செய்திடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, உருளைக்கிழங்கு பேஸ் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்திடுங்கள் பின்னர் அதனை முகத்தில் பூசி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து அது காய்ந்ததும் கழுவி விடலாம்.

உருளைக்கிழங்கு அத்துடன் வெள்ளரி இரண்டு சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் இயற்கை டோனர் போல செயல்படும். இதை வாரம் இரண்டு முறை செய்திடலாம். சரும பொலிவிற்கும் இது வழி வகுக்கும்.

Leave a Response