விஸ்வரூபமெடுக்கும் வாக்கி டாக்கி ஒப்பந்த ஊழல்! ஒரே ஒரு நிறுவனம் ஒப்பந்தம் கோரிய ஆச்சர்யம்!

‘எங்கெங்கு காணினும் ஊழல்’ என டுவிட்டரில் கமல்ஹாசன் குமுறிக்கொண்டிருக்க இங்கு மெளனமாக மற்றுமொரு ஜனநாயகப்படுகொலையெனும் ஊழலை தமிழக அதிகாரிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

சத்துணவு முட்டை ஒப்பந்த ஊழல், பேருந்துகளுக்கு புதிய டிக்கெட் எலக்ட்ரிக் மெசின் வாங்கியதில் முறைகேடு, குட்கா விவகாரம் என  அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் தற்போது புதிதாக முளைத்திருப்பது வாக்கிடாக்கி ஒப்பந்த ஊழல்.

201710051232512445_1_police12._L_styvpf

தமிழக போலீசார்கள் எப்போதும் பயன்படுத்தும் வாக்கிடாக்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்ததில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்று விளக்கமளிக்குமாறு டிஜிபிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையினர் செல்போன்களுக்கு பதிலாக அன்றாடம் அதிகம் பயன்படுத்துவது இந்த வாக்கி டாக்கிகளை தான். காவல்துறையின் செயல்பாடுகளை  ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வதில் முக்கியப் பங்காற்றுவதும் வாக்கி டாக்கிகள் தான். இத்தகைய வாக்கி டாக்கிகளை புதிதாக காவல்துறைக்கு வாங்க பிரபல தனியார் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து விதிமீறல்கள் உள்ளனவா? என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விளக்கமளிக்குமாறு உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் தமிழக ஒப்பந்த விதிகளுக்கு எதிராக ஒரே நிறுவனத்திற்கு மட்டும் ஏன்? ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எல் அண்ட் டி நிறுவனம் கட்டுமானம் உட்பட் பல்வேறு துறைசார்ந்த பணிகளை மேற்கொண்டு வந்தாலும், வாக்கி டாக்கி போன்ற தொலைதொடர்பு சாதனங்களை வாங்கித்தருவதில் பெரிய அனுபமில்லாத நிறுவனமாகும். அதுமட்டுமின்றி அலைக்கற்றையைக் கையாள உரிய அனுமதியை பெறாத நிறுவனம் எனவும் கூறப்படுகிறது.

T.K.Rajendran

இது தொடர்பாக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் அனுப்பியுள்ளக் கடிதத்தில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஒப்பந்தத்திற்கு ஏற்ப உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்? வாக்கி டாக்கி போன்ற தொலைதொடர்பு சாதனங்களை வாங்கித் தர அனுபவமில்லாத நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்? எந்த அடிப்படையில் எல் அண்ட் டிக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது என்று சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அலைக்கற்றையைக் கையாள உரிய அனுமதி பெறாத நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தை பெற்றது. ரூ. 84 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் போடப்படுவது குறித்து அரசுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டதாதது ஏன்? என்றும் நிரஞ்சன் மார்டி கடிதத்தத்தில் டிஜிபிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் இறுதி செய்யப்படுவதற்கு முன் எந்த தொழில்நுட்பத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன?,   ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு ஒப்பந்தத் தொகையில் வரிபிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்றும்  நிரஞ்சன் மார்டி கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இதற்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்படும் பதில் என்னவென்றால், வேறு எந்த நிறுவனங்களும் ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லையென்றும்,விதிகளுக்குட்பட்டு ஒரே ஒரு நிறுவனம்தான் டெண்டர் கோரியதாகவும், எனவே அந்த ஒப்பந்தம் எல் அண் டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியுடன் ஒப்பந்தம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். விதிகளை முறையாக பின்பற்றியே வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
stalin112_09086_11171

“இதுவரை மற்ற துறைகளில் மட்டுமே இருந்த ஊழல் தற்போது காவல்துறையிலும் ஊடுருவியுள்ளது. தமிழ்நாடு எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது” என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

201708252351517071_The-Government-should-allow-Dr-Ramadoss_SECVPF
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காவல்துறைக்கு வாக்கிடாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்”.என்றார்.

எதிர்கட்சிகள் மிகத்தீவிரமாக இந்த விவகாரத்தை கையிலெடுத்திருப்பதால் குட்ஹா விவகாரத்தை விட இது பெரும் பூதகரமாக வெடிக்குமென எதிர்பார்க்கலாம்.

Leave a Response