ஹெல்மெட் இல்லனா பெட்ரோல் இல்லை ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு அடிச்சாரு ஆப்பு!

no helmet

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக அதிரடி அரசாணையை பிறப்பித்துள்ளார். அதில் இனி ஹெல்மெட் போட்டுக் கொண்டு பெட்ரோல் பங்கிற்கு போகவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில், சாலை பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.

no helmet1

இந்தியாவில் அதிகரித்து வரும் வாகன பயன்பாட்டிற்கு ஏற்ப சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மது போதையில் வாகனம் ஓட்டுதல், குறிப்பிட்ட அளவை விட அதி வேகத்தில் ஓட்டும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

helmat

அதிலும் 2 சக்கர வாகனங்கள் விஷயத்தில், சாலை பாதுகாப்பு மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதனால், ஹெல்மெட் அணிவதை அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஆந்திராவிலும் இன்று முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. கடந்த ஆண்டு தான் இந்த சட்டம் உத்தராகண்ட் தலைநகரான டெஹ்ராடூன் நகரில் அமல்படுத்தபட்டுள்ளது.

Leave a Response