எடப்பாடியும் தினகரனுமாய் மோதிக்கொள்ளும் அண்ணன் தம்பி! ‘ஆயிரத்தில் இருவர்’ சினிமா விமர்சனம்

_Aayirathil-iruvar-Preview1._L_styvpf

அண்ணன் தம்பி இரட்டை பிறவிகள் என தமிழ் சினிமாவில் கதை உருவாக்கினால் திரைக்கதை எப்படியெல்லாம் இருக்கும்?

எது எப்படியிருக்குமோ இருக்காதோ… அடித்துக் கொள்வதில் இருவரும் எடப்பாடியும் தினகரனுமாய்த்தான் இருப்பார்கள்!

ayirathil-iruvar

அப்படிப்பட்ட இரட்டைப் பிறவிகள் வினய் & வினய்.

இருவருக்கும் அழகான காதலிகள், சொத்து பத்து தகராறு, பங்காளிச் சண்டை பஞ்சாயத்து, ஆளமாறாட்ட அலப்பரை, அங்கங்கே காமெடி கலகலப்பு எல்லாமும் சேர்ந்தால் ஆயிரத்தில் இருவர்!!

கதையின் ஒரு பக்கம் அருள்தாஸ் கோஷ்டி காமெடித் திரி பற்ற வைத்து கூத்தடித்துக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் ஹவாலா மோசடி, கறுப்பு பணம் என காஜல் பசுபதி ‘பிக் பாஸாய்’ வரிந்து கட்டிக் கொண்டிருக்க,

அந்த நேரமாய் பார்த்து அந்த வினய் இங்கு போய், இந்த வினய் அங்கு போய் என ஆள் மாறாட்டம் ஆரம்பமாகி,

கோவை, ஹைதராபாத், தாய்லாந்து என கதை அங்குமிங்குமாய் பயணித்து,

சொத்து தகராறு எப்படி தீர்கிறது என்பதில் முடிகிறது படம்!

தங்கப் பல்லுடன் இருப்பது ஒரு வினய், தங்கப் பல் இல்லாதவர் இன்னொரு வினய். கெட்டப் சேஞ்சுக்கு இதைத்தாண்டி அலட்டிக் கொள்ளவில்லை. வினய்யும் நடிப்பில் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை! அதனாலேயே தேறுகிறது அந்த கேரக்டர்!

aayiram

படத்தில், வெண்ணிலா ஐஸ்கிரீமை வெண்ணெய் சேர்த்துக் குழைத்தது மாதிரி சாமுத்ரிகா, கேஷா கம்பாத்தி, ஸ்வஸ்திகா என மூன்று ஹீரோயின்கள். யார் அதிகம் காட்டுவது’ என போட்டி போட்டது மாதிரி தெரிகிறது! போட்டியில் கேஷா …பேஷா!

பரத்வாஜ் இசையில் பாடல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன, போய்க் கோண்டேயிருக்கின்றன. மனதில் நின்றபாடில்லை. அந்த தசரா விழா பாட்டு பிரமாண்டம்!

சில காட்சியமைப்புகள் இது ரொம்ப நாள் முன்பு எடுத்த படம் என்று போட்டுக் கொடுக்கிறது!

தொடர்ச்சியாக பேய்ப்படம், கிரைம் திரில்லர் என்றே வந்துகொண்டிருக்கும் சூழலில் திடுதிப்பென காமெடி மசாலா படம் ஒன்று வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல்! இயக்கம்: சரண்

Leave a Response