ஃபேஸ்புக்கில் எங்களை விமர்சிப்பதா? கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி!

neet protest

 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டதாகவும், மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்ற கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி  கிருபாகரன் அறிவுரை வழங்கினார்.

 

high court

 

 

மேலும் நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் பேச கூடாது என்று அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்றும், குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

 

காலம் தாழ்த்தியதால் தான் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று நீதிபதி வருத்தத்துடன் தெரிவித்தார். நீட் பயிற்சி மையங்கள், ஆலோசனை குழு தொடர்பாக 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

நீதிபதியை விமர்சித்ததற்கு கண்டனம்

 

நீதிபதிகள் குறித்து இணையதளங்களில் விமர்சித்தவர்களை கண்டறிய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரனை இணையத்தில் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சிகள், அரசு பள்ளிகள் தரம் உயர்த்த குரல் கொடுக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

 

Leave a Response