பேய் முகத்தில் ததும்பும் வசீகரம் ருசிகரம்! ‘பயமா இருக்கு’ சினிமா விமர்சனம்

Bayama-Irukku ottran 2

மனைவியோடு வாழ்வதாக நம்பும் கதாநாயகன். அவன் வாழ்வது மனைவியோடு அல்ல, பேயோடு என்று சொல்லும் ஊரும் நண்பர்களும்! இதுதான் படத்தின் ஒன்லைன்.

அவ இறக்கலைடா, அவ உயிரோடதான் இருக்கா” என முகத்தில் வேதனையைக் காட்டுவது, மனைவி மீது நேசத்தை நிறைப்பது என கதாநாயகன் சந்தோஷ் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் நன்கு பொருந்தியிருக்கிறார்!

பேய் வேடத்தில் வருகிற கதாநாயகிகள் என்ன செய்வார்களோ அதை சரியாகச் செய்திருக்கிறார் ரேஷ்மி மேனன். மெல்லிய புன்னகையுடன் எப்போதாவது நான்கு வார்த்தை பேசிக் கொண்டு பாந்தமாக வரும்போது அந்த முகத்தில் ததும்பும் வசீகரம் ருசிகரம்!

res

மொட்டை ராஜேந்திரன் என்ன செய்வாரோ அதை செய்கிறார், ஸ்பெஷலாய் ஏதுமில்லை! அவருடன் ஜீவாவும் ஜெகனும் சேர்ந்துகொள்ள அலப்பரை காமெடி கொஞ்சம் களைகட்டுகிறது!

பேயோட்டி டெவில் தேவிகா’வாக வருகிற கோவை சரளாவும் மொட்டை ராஜேந்திரனும் அடிக்கும் லுட்டிக்கு தியேட்டரில் அங்கங்கேயிருந்து அப்ளாஸ்!

இலங்கைப் போரில் தொடங்கும் கதை கேரள எல்லைப் பகுதியில் தொடர்கிறது. அந்த பகுதியின் பேரழகு, போட் சவாரி, விரிந்து பரந்த நீர்நிலை, மரம் செடி கொடிகளின் பசுமையெல்லாம் மனதைத் தொடுகிறது! ஒளிப்பதிவுக்கு பாராட்டு!

பின்னணி இசை காட்சிகளோடு இசைந்து பயணிக்கிறது!

bayama-irukku ottran

அங்கிருந்து இங்கிருந்து என்றல்ல எங்கிருந்தும் கோரமாய் ஒரு முகம் எட்டிப் பார்ப்பது, அதை பார்த்து நடுங்குவது என்ற வழக்கமான பேய்ப்படக் காட்சிகளே படம் முழுக்க நீள்கிறது. இவற்றையெல்லாம் பல படங்களில் பார்த்தாயிற்று. வரும்காலங்களில் இந்த டெம்பிளேட்டை தூக்கி தூர எறிவது தமிழ் சினிமாவுக்கு நல்லது!

பயமா இருக்கு, கொஞ்சமாய் பயங்காட்டுகிறது!

Leave a Response