தமிழ் சினிமாவில் அதிகம் கையாளாத கதைக்களம்! ‘களவு தொழிற்சாலை’ சினிமா விமர்சனம்

k t

சர்வதேச சிலைக்கடத்தலை மையப்படுத்திய கதை!

கிருஷ்ணஷாமி இயக்கத்தில் வம்சி கிருஷ்ணா, கதிர், களஞ்சியம், குஷி, செந்தில் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம்!

நம்மூரின் அரிய பழங்காலத்து சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு விற்கும் தொழிலில் இருப்பவன் வம்சி கிருஷ்ணா. அவன்,
கும்பகோணத்திலுள்ள பழமையான கோயில் ஒன்றிலிருந்து 500 க்கும் அதிக மதிப்புள்ள மரகத லிங்கத்தை கடத்துவதற்கு திட்டம் தீட்டுகிறார்.

திட்டத்தில் தனக்குத் துணையாக அந்த ஊரில் ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விநாயகர் சிலைகளைத் திருடி விற்கும் கதிரை பயன்படுத்துகிறார்.

தன்னைக் காதலிக்கும் நாயகி குஷியைத் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாவதற்கு விம்சி கிருஷ்ணா கொடுக்கும் பணம் உதவும் என்ற ஆசையில் மரகத லிங்கத்தை திருடி வம்சி கிருஷ்ணாவிடம் கொடுக்க ஒத்துக் கொள்கிறார்.

திட்டமிட்டபடி மரகத லிங்கத்தைக் கடத்தினார்களா?இல்லையா? என்பதுதான் படத்திலிருக்கும் சுவாரஸ்யம்.

வம்சி கிருஷ்ணாவிடம் ஏற்கனவே பார்த்த படங்களில் இருந்த கம்பீரமான நடிப்பு இதில் மிஸ்ஸிங். கேரக்டர் அப்படி! அதை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார்!

கதிர், குஷி, களஞ்சியம் ஆகியோர் அவரவர் கேரக்டருக்கு தங்களாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்!

நடிகர் செந்தில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். எல்லா முயற்சியும் வெற்றி பெறுவதில்லை!

அங்கங்கே செயற்கை நெடியடித்தாலும் கோயிலுக்கடியில் இருப்பதாக காட்டப்படும் அந்த இருட்டு சுரங்கப்பாதையில் ஆர்ட் டைரக்டரின் உழைப்பு வெளிச்சமாய் தெரிகிறது!

திருவிழா, சுரங்கப்பாதைக்குள் பயணிக்கும் காட்சிகள், ஏற்காடு மலை… இதெல்லாம் ஒளிப்பதிவு பாராட்டு பெறும் இடங்கள்!

அறிமுக இசையமைப்பாளர் ஷியாம் பெஞ்சமினின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு ஓரளவே கை கொடுத்திருக்கிறது!‘தஞ்சாவூரு பாரு’ பாடல் சிறப்பு!

தமிழ் சினிமாவில் அதிகம் கையாளாத கதைக்களம்! அந்த கதைக்களத்தை, கதிரின் இயல்புத் தன்மை மீறிய நடிப்பு, கதையுடன் ஒட்டாத கதிர் – குஷியின் காதல், அத்தனை கோடி மதிப்புள்ள சிலை கடத்தப்பட்டதை ஓட்டை சைக்கிள் காணாது போனது போல் படு அலட்சியமாக விசாரிக்கும் அதிகாரிகள் என நாடகத்தனமான திரைக்கதைக்குள் புகுத்தி ‘களவு தொழிற்சாலை’யின் பரபரப்பைக் குறைத்திருக்கிறார்கள்!

முதல் 10 நிமிட காட்சிகள் படத்தின் பலம்!

Leave a Response