மெக்சிகோ பூகம்பத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி; ஆதரவுக் கரம் நீட்டுகிறது அமெரிக்கா!

2

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன!

மெக்சிக்கோவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்நிலையில் நேற்று மத்திய மெக்சிக்கோவில் ராபோசோ, பூப்லா ஆகிய பகுதிகளில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
பூகம்பத்தில் கட்டடங்கள்,வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தவிர, இந்த பூகம்பத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதோடு இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம், பாதுகாப்பு படையினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

meksigo1

மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.

Donald_Trump

இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிக்கோவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்ததாவது: மெக்சிக்கோவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். உங்களுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response