நாடே எதிர்பார்க்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு எப்போது? இன்று தெரிந்துவிடும்!

2g

முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் முறைகேடு நடந்ததால் ரூ1,76,000 கோடி இழப்பீடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கை குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டால் நாடு முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

kanimozhi

இது தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜூலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி ஆகஸ்ட் 25ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆக.25ம் தேதி, தீர்ப்பு இன்றும் தயாராகவில்லை என்றும், எனவே செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். நீதிபதி ஓபி ஷைனி.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்கள் தரப்பு இறுதி விளக்கத்தை இன்று தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

நாடே எதிர்பார்க்கும் இந்த வழக்கில் தீர்ப்பு தேதியை சிபிஐ நீதிமன்றம் நாளை அறிவிக்கப்பட உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Response