கெளரி லங்கேஷ் படுகொலை விவகாரம்; சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை! -கர்நாடக முதல்வர் உத்தரவு

gauri1

மூத்த பத்திரிகையாளரும், சமூகப் போராளியுமான கெளரி லங்கேஷ் படுகொலைக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின், சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

sidharaman

அப்போது அவர், மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு(எஸ்.ஐ.டி.) அமைக்கப்படும். போலீஸ் ஐ.ஜி. தலைமையில் அந்த விசாரணைக் குழு செயல்படும். சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கூட, எங்கள் அரசு தயாராக இருக்கிறது.

இந்த வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக எடுக்கப்போகிறார்கள். இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ஐ.ஜி.தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.பி. அதிகாரகளுக்கு ஆணையிட்டு, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கூறியுள்ளேன்’’ என்றார்.

இந்த வழக்கைப் பொருத்தவரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க காலம் நிர்ணயிக்கவில்லை. சிறப்பு விசாரணையை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த கொலைக்கு பின், மாநிலத்தில் சுதந்திர சிந்தனையாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு ஆணையிட்டுள்ளேன்’’ என்றும் தெரிவித்தார்!

Leave a Response