துணை ராணுவம் மற்றும் போலீசாருக்கு “ஸ்மார்ட் சீருடை”- மத்திய அரசு முடிவு!

police-uniform

ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காக்கி சீருடையை மாற்றிவிட்டு, நாடுமுழுவதும் போலீசாருக்கு “ஸ்மார்ட் சீருடை”யை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

9 வகையான வடிவங்கள், மிரட்டாத வண்ணம், எடுப்பான தோற்றம் தரும் அழுக்கு படியாத ஆடைகள் என பல அம்சங்களுடன் சீருடைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநில போலீசாருக்கு தேவையான வண்ணத்தை தேர்வு செய்யலாம்.

ஆமதாபாத்தில் உள்ள ‘தேசிய டிசைனிங் கல்வி நிறுவனம்’ ஏற்குறைய 5 ஆண்டுகள் உழைப்பில் இந்த ஆடைகளை வடிவமைத்துள்ளது. போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து தேசிய டிசைனிங் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தின் காலநிலை, பருவநிலை, பார்ப்பதற்கு மிடுக்காக இருக்கும் வகையில் நிறங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்த புதிய சீருடை நிரந்தரமாக்கப்பட உள்ளது.

ஏற்குறைய 9 வகையான வகையான வண்ணங்களில் சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. சட்டை, பேண்ட், பெல்ட், தொப்பி, ஷூ, ஜாக்கெட், மழைக்கோட்டு, உள்ளிட்ட பல அம்சங்களுடன் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள போலீசாருக்கு மட்டுமல்லாமல், துணை ராணுவப் படையினருக்கும் இந்த சீருடை மாற்றம் அமலாகிறது.

மாநில வாரிய போலீசாரிடம் எடுக்கப்கப்பட்ட கருத்துக்கணிப்புகள், மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் போலீசாருக்கான காக்கி நிற சீருடை ஒரு ஒழுங்கில்லாத வண்ணத்தில் இருக்கிறது. இது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில் அடர் வண்ணத்தில் பேண்ட் இருந்தால், அதைக்காட்டிலும் வண்ணம் குறைவாக மேல்சட்டை இருக்கும் வகையில் ஆடை வடிவமைக்கப்படுகிறது.

சில போலீசார் தொப்பி அணிவதால், தலை முடி கொட்டுவதாக புகார் தெரிவித்தனர். அதைத் தவிர்க்கும் வகையில், ஸ்மார்ட் தொப்பி கொண்டுவரப்படுகிறது. தரமான கம்பளியால், துணியால், சர்வதேச டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், சீருடையிலையே வாக்கி டாக்கி, செல்போன், சாவிகள், கையடக்க லத்தி, விசில், டார்ச்லைட், உள்ளிட்ட பொருட்களை வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் அனைவருக்கும் ஏற்றவகையில், அவர்களின் கால்களுக்கு நோகாத வகையில் ஷீ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷூ வை அணிந்து பணியாற்றும் போது போலீசாரின் கால்களுக்கு எந்தவிதமான பாரம் இல்லாமல், அழுத்தம் கொடுக்காமல் இருக்கும்.

இது குறித்து போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் மீரா போர்வாங்கர் கூறுகையில்:-

“ மக்களுக்கு போலீசாரின் காக்கி நிறத்தை கண்டாலே ஒருவிதமான வெறுப்பு உருவாகிவிட்டது அதை மாற்றும் வகையிலும் மக்களுக்கு நண்பனாக தோற்றம் அளிக்கும் வகையில் சீருடை மாற்றப்படுகிறது. மேலும், சீருடை ஒவ்வொரு மாநிலத்தின் காலநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது.

போலீசாரின் உடலுக்கு எளிதாக பொருந்தும் வகையில், ஆடைகள் மெலிதாகவும், தரமாகவும், எளிதில் சுத்தம் செய்யும் வகையிலும், எங்கிருந்து மக்கள் பார்த்தாலும் தெரியும் வகையில் மிகுந்த “ஸ்மார்ட்டாக” சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Response