நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் துவங்கியது!

mk

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இன்று சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் அறிவித்தார்.

அதன்படி இன்று சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடந்த்தி வருகிறது.

அந்த போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கனிமொழி எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு நல்லக்கண்ணு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

stalin

மு.க.ஸ்டாலின் பேசுகையில்:-

நீட் தேர்வு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளார். பிளஸ் டூ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் அளவிலேயே பாடத்திட்டம் உள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கை நசுக்கப்பட்டு உள்ளது திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

thirumal

தொல்.திருமாவளவன் பேசுகையில்:-

நீட் தேர்விலிருந்து விலக்களிக்காத மத்திய அரசுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தொல்.திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Response