திடீர் என மும்பை புறப்பட்டார் கவர்னர்!

aalunar

கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து நேற்று மதியம் சென்னை வந்தார். மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று காலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை சந்தித்தார். அப்போது அவர்கள் கொடுத்த அரசுக்கான ஆதரவு வாபஸ் மனுக்களை பெற்றார்.

அவர்கள் சென்றதும் ஓ.பி.எஸ். ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி. கவர்னரை சந்தித்து பேசினார்.

பின்னர் காலை சுமார் 11 மணி அளவில் கவர்னர் சென்னையில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

1 Comment

Leave a Response