நம்ம உடம்புல இருக்குற நோய் எளிமையாக தீரவேண்டுமா? இந்த பாட்டி வைத்தியத்தை படிங்க

PATTI-PHOTO
1) செம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி தேய்த்து வர தலை அரித்தல், தலை எரிச்சல் நீங்கும் .

2) கானா வாழை இலையை அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வர உடல் அரிப்பு குறையும்.

3) சீரகத்தை பொன் வறுவலாக பொடி செய்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும்

4) ஆவாரம் பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும்.

5) மதிய உணவுடன் அடிக்கடி அகத்தி கீரையைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.

6) வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால் வாந்தி குறையும்.

7) சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

8) கரப்பான் பூச்சி கடித்த இடத்தில் வேப்பிலையும், மஞ்சளையும் அரைத்துப் போட்டால் வலி குறையும்.

9) வேப்பம் பூவை சிவக்க பொரித்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

10) தூதுவளை, வல்லாரை, கறிவேப்பிலை மூன்றையும் போடி செய்து தினமும் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

டாகடர்: அருண் சின்னையா

Leave a Response