சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க … ஒரு சிறந்த பரிகாரம்

sani
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும். தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்

எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு திரும்ப கிடைப்பது அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா புக்தி நடக்கும் காலங்களில் அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக.
ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக, அல்லது அதை நன்கு பொடி செய்து, சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு, அந்த அரிசியை விநாயகரை சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம்.

சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கி்சென்ற பச்சரிசி மாவை,, எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும், அதன் கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை, முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை, கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனிபகவானின் தொல்லைகள், நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி, சனி மகா தசை நடப்பவர்களுக்கு,இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். உடல், ஊனமுற்றவர்களுக்கு காலணிகள், அன்ன தானம் அளிப்பது , மிக நல்லது.

Leave a Response