பூமிக்கு கீழிருந்து யார் நீர் எடுத்தாலும் அது திருடுதல் தான் – குருஜி மித்ரேஷிவா…

Neerukku Nandri Press Meet
இயற்கையின் அருட்கொடையான தண்ணீருக்கு கங்கா ஆரத்தி போல, திருச்சி கல்லணையில் ‘தக்ஷணா பவுண்டேஷன்’ சார்பில் ஆரத்தி திருவிழா நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 06, 2017 அன்று மாலை திருச்சியில் நடிகர்கள், முக்கிய விருந்தினர்கள், அதிகாரிகளோடு பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒன்று திரண்டு ‘நீருக்கு நன்றி’ சொல்ல இருக்கிறார்கள். இந்த ஆரத்தி திருவிழா குறித்து குருஜி மித்ரேஷிவா பத்திரிகையாளர்களை சந்தித்து நீரின் அவசியம் பற்றியும் திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சியின் அவசியத்தையும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்று எழுப்ப, அதற்கு பதிலளித்த குருஜி மித்ரேஷிவா கூறியதாவது, “பூமிக்கு கீழ் உள்ள நீர் நமக்கு சொந்தம் கிடையாது. அந்த நீர் பூமிக்கு கீழே வாழும் உயிரினங்களுக்கத் தான் சொந்தம். பூமிக்கு கீழிருந்து இந்தியாவில் மட்டும் தான் ஆழ் துளை போட்டு தண்ணீர் எடுக்கின்றனர். பூமிக்கு கீழிருந்து நீர் எடுப்பதை ‘நீர் திருடுதல்’ என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு தேவையான நீர் வேண்டுமென்றால் மழை உட்பட இயற்கையாக வரும் நீரை சேமித்து வைக்கவேண்டும். நாம் நீரை மதிப்பதில்லை. நாம் ஒரு உயிரினத்தை மதித்தால் தான் அந்த உயிரினம் நம்மை மதிக்கும். அதைப்போல் தான் நாம், நமக்கு உயிராதாரம் தரும் நீரை மதிக்க வேண்டும், அதற்கு நாம் நன்றியும் சொல்லவேண்டும். அவ்வாறு நன்றி தெரிவிப்பதால் அந்த நீர் நம் வாய்ச்சொல்லில் வரும் நன்றி என்ற வார்த்தையின் அலைகளால் அந்த நீரின் மனம் குளிரும்!” இவ்வாறு குருஜி மித்ரேஷிவா பேசினார்.

Leave a Response