கொல்கத்தாவில் பழங்கால சிலைகள் கடத்தல் – மூன்று பேர் கைது !

ssb 2
மேற்குவங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சிலை கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சகஸ்ர சீமா பால் (எஸ்எஸ்பி) படை வீரர்கள், போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில் 8 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகள் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து எஸ்எஸ்பி அதிகாரிகள் கூறுகையில், ‘சிலை கடத்தல் வழக்கில் ராதா மோகன் பார்தி (35), மிரஜுல் ஹாக் (48), நஜீர் ஹுசைன் (33) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கொல்கத்தாவின் பன்கூரிலிருந்து பராசத் பகுதிக்கு கடத்த முயன்ற போது இவர்களிடமிருந்த 6 பழங்கால சிலைகள் மற்றும் அதற்கான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என தெரிவித்தனர்.

பின்னர் சிலைகள் மற்றும் குற்றவாளிகளை அம்டங்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Response