எம்.ஜி.ஆர். நினைவிடத்தை வணங்க முடியவில்லை! பொது மக்கள் வேதனை!

mgr

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைக்கப்பட்டது. அன்றைய நாள் முதல் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை சுற்றி போலீசார் பாதுகாப்புக்காக தடுப்பு வேலி அமைத்து இருக்கின்றனர்.

தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருப்பதால் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை பார்க்க வரும் தொண்டர்கள், பொதுமக்கள் அதை தொட்டு வணங்க முடியவில்லை என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

நினைவிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கோரிக்கையை தமிழக அரசு பரிசிளிக்குமா.

Leave a Response