ஆக.7 -இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் கிடையாது ?

moon
சந்திர கிரஹணம் ஏற்படும் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று (தமிழ் மாதமான ஆடி 22 ஆம் தேதி) சந்திர கிரஹணம் இரவு 10.49 மணிக்குத் தொடங்கி நள்ளிரவில் முடிவடைகிறது.

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். அம்மன், சுவாமி மூலஸ்தானம் பலகனி கதவுகள் அடைக்கப்படும். அந்த நேரத்தில், பொதுமக்கள் சுவாமி, அம்மன் தரிசனமோ, அர்ச்சனையோ செய்ய இயலாது. சந்திர கிரஹண மத்திம காலம் இரவு 11.49 மணிக்கு நள்ளிரவில் வந்ததும் தீர்த்தம் கொடுக்கப்பட்டு, மறுநாள் 12.47 மணிக்கு கிரஹண அபிஷேகம் நடைபெறும்.

அதன்பின்னரே கோயில் நடை திறக்கப்படும். பின்னர், அதிகாலை 1 மணிக்கு (செவ்வாய்க்கிழமை) அர்த்த ஜாம பூஜைகளைத் தொடர்ந்து, பள்ளியறைப் பூஜை நடைபெறும். அதன்பின்னர், கோயில் நடை சாத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response