தமிழக வீட்டு வசதி வாரியத்தில் தொடரும் ஆளுங்கட்சியின் அராஜகம்! டெண்டரில் தில்லு முல்லு?

TNHB Tender Scam
சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது சோழிங்கநல்லூர். இங்கு கணினி நிறுவனங்கள் பல அமைந்துள்ளதினால் இப்பகுதியின் ரியல் எஸ்டேட் மார்கெட் படு ஜோர். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் சுமார் ரூ.220 கோடி மதிப்பில் 2000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் டெண்டர் என் CC/08/2017-18, மே 09, 2017 அன்று டெண்டர் கோரப்பட்டது.

இந்நிலையில் தமிழக வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றும் சில மேலதிகாரிகள், ஆளும் அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு வேண்டப்பட்ட அரசியல் செல்வாக்குள்ள ஈரோட்டை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரை மட்டுமே டெண்டரில் பங்கேற்க செய்யவைத்து மற்றவர்கள் யாரையும் இந்த டெண்டரில் அனுமதிக்காமல் இருக்க முயற்சி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டெண்டர் மோசடிக்கு தாங்கள் துணை போக முடியாது என்று கூறி, அன்று தமிழக வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த திரு.கிரண் குரானா மற்றும் தலைமை பொறியாளர் இந்த மோசடி வேலையை தடுத்து நிறுத்தி ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.

இந்த சூழலில் பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தமிழக வீட்டு வசதி வாரிய மிரட்டல் அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர்களுடைய ஒப்பந்த கோரிக்கையை சமர்பித்தனர்.

கிரண் குமார் இந்த டெண்டர் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு தான் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தமிழக வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை, அதை அபகரித்த சமுக விரோதிகளிடமிருந்து மீட்டெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரண் குமாரின் இந்த நேர்மையான நடவடிக்கை ஆளும் கட்சியினரிடம் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த டெண்டர் விஷயத்தில் ஊழலுக்கு துணை போக மறுத்ததினால் அவர் தமிழக வீட்டு வசதி வாரியத்தில்லிருந்து வேறு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டார்.

தற்போது கிரண் குமார் பனி இடம் மாற்றம் செயப்பட்டுள்ள நிலையில் நாளை (ஆகஸ்ட் 02, 2017) நடக்கவுள்ள வாரிய கூடத்தில், குறைந்த மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியில் தேர்ச்சி பெற்றுள்ள அந்த பெங்களூர் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் சில மாற்றங்களளை கொண்டுவருவதற்கு காரணங்களை காட்டி ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சாதகமாக இந்த ஒப்பந்தத்தை நீக்க அல்லது செல்லாதபடியாக்க தமிழக வீட்டு வசதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response