உளுந்து விளைச்சல் பல மடங்கு உயர்ந்ததால்…. விலை குறைவு!

p51a
தமிழகத்துக்கு தேவையான உளுந்தம் பருப்பு, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது. இம்மாநிலங்களில், நடப்பாண்டில் உளுந்து விளைச்சல் பல மடங்கு உயர்ந்ததால், அங்கிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் உளுந்து, உளுந்தம் பருப்பின் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் வரை, வாரத்துக்கு, 125 லாரிகளில் வந்து கொண்டு இருந்த உளுந்து, உளுந்தம் பருப்பு வரத்து, 250 லாரிகளாக உயர்ந்துள்ளது. இதனால், விலை குவிண்டாலுக்கு, 300 ரூபாயும், கிலோவுக்கு, மூன்று ரூபாயும் சரிந்துள்ளது.

விலை சரிவு விபரம்:-

உளுந்தம் பருப்பு முதல் தரம் கிலோ, 96 ரூபாய்க்கு விற்றது, 93 ரூபாயாகவும், இரண்டாம் தரம், 88 ரூபாய்க்கு விற்றது, 83 ரூபாயாகவும், மூன்றாம் தரம், 85 ரூபாய்க்கு விற்றது, 82 ரூபாயாகவும், பர்மா ரகம், 75 ரூபாய்க்கு விற்றது, 72 ரூபாயாகவும் சரிந்துள்ளது.

Leave a Response