அப்துல்கலாமுக்காக ஒரு பாடல்!

apj
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் ஐய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலியை முன்னிட்டு ‘கலாம் ஆன்தம்’ என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க திரு.வசந்த் அவர்கள் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த ‘கலாம் ஆன்தம்’ ஐ ‘மார்க் குரூப் ஆப் கம்பனிஸ்’ ன் தலைவர் திரு.GRK ரெட்டி தயாரித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பாடலின் டியூன் மற்றும் படமாக்கப்பட்ட விடம் சிறப்பாக இருப்பதாயும் கூறப்படுகிறது.

தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் எனவும், இந்தியன் அறிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுகு தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து கூறியுள்ளார். ‘கலாம் ஆன்தம்’ மிற்கு கருவாக இருந்தவர் ‘Green Man Of India’ என்று அழைக்கப்படும் Dr.K.அப்துல் கனி அவர்கள். கலாம் அய்யாவின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரின் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜூலை 27 அன்று நடக்கவிருக்கும் இதன் திறப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நினைவு மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். அப்துல் கலாம் அவர்களின் பேரன்களான APJ. ஷேக் சலீம், APJ ஷேக் தாவூத், G K மெய்தீன் மற்றும் திரு. அப்துல் கனி இந்த நினைவஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளனர்.

Leave a Response