கமல்ஹாசனை விமர்சித்த பாஜகவின் மாநிலத் தலைவர்!

thamizisay
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் விளக்கமளித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மற்றும் லஞ்சம் இருக்கத்தான் செய்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்தனர். இதற்கிடையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமலுக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு என்று தெரிவித்தார். இதன் எதிரொலியாக தற்போது பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அதிமுக அரசு மீது குறை சொல்ல கமலுக்கு இப்போது தான் தைரியம் வந்ததா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது சொல்லிருக்க்கலாமே. சினிமா துறையின் கஷ்டப்படுகிற குடும்பங்களுக்கு உதவி செய்வதில் கமல் கவனம் செலுத்த வேண்டும். அதோடு முதலில் சினிமா துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தாலே போது, அரசியலைப் பற்றி பின்பு பார்க்கலாம். கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காத கமல், தற்போது ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏன் பேசுகின்றார் என்று கமலை விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டு தேவையற்றதில் தலையிடுகிறார் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழிசை கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Response