கிரிப்பிள்ளை ரோமத்தில் செய்த தூரிகைகள் பறிமுதல்!

brush
கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் ரோமங்களால் செய்த ஓவியம் வரையும் தூரிகைகள் விற்கப்படுவதாக மத்திய வன உயிரின பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் காந்திபுரம் கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட கோவை மாநகரின் பல பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

டவுன்ஹால் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையில் கடை ஒன்றில் கீரிப்பிள்ளையின் ரோமத்தால் தயாரிக்கப்பட்ட தூரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 25,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் விதவிதமான தூரிகைகள் இதில் அடங்கும். இவற்றின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் இருக்கும்.

கோவையைப் போல ராமநாதபுரம், சவுரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் வன விலங்குகளை வேட்டையாடி தூரிகைகள் செய்து விற்கும் நாசகார கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனைகளிலும் விலங்குகளைக் கொன்று தயாரித்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response