மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த நடிகர்!

Treeplanting
நம் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடனக்கலைஞர், தயாரிப்பாளர், போன்ற பல பரிமானங்களில் இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஓரு சமுக ஆர்வலரும் கூட ஏனென்றால் அவர் தற்போது விவசாயிகள் கூட்டியக்கத்துடன் இணைந்து 6 – 8 அடி உயரமுள்ள 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில்
விவசாயிகளுக்கான விவசாய சங்கங்கங்களின் கூட்டியக்க அலுவலகமும் திறக்கப்பட்டது.

இதில் விடுதலை சிறுத்தைக் கட்சுயின் தலைவர் தொல் திருமாவளவன், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி ஏ.எல்.ஏ தனியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, விவசாயக் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி, நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
larans
விவசாய சங்கங்கங்களின் கூட்டியக்க அலுவலகம் திறக்கப்பட்ட விழாவில் பேசிய லாரன்ஸ்:- நடிகர் விஜய், சிம்பு, தமன்னா ஆகியோர் குடிசைப்பகுதி குழந்தைகள் முன்னேற்றத்திற்கு தனது ‘Do something’ திட்டத்திற்கு உதவுகிறார்கள் என்றும், ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை பின் தொடர்வேனே எனத் தெரியாது. ஆனால் அதிலும் அவர் வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Response