மரகதநாணயம்- விமர்சனம்

vim
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் வெளியாகிறது.சில படங்கள் நம் மனதுக்கு பிடித்த படமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் படம், ஒரு சிலருக்கு சண்டை காட்சிகள், இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான படம் பிடிக்கும். சினிமா ரசிகர்களுக்கு வெரைட்டி, புதுமை இவை இரண்டும் இருக்கணும். அப்படி ஒரு படம் தான் மரகதநாணயம்.புதுமையான கதை,வித்தியாசமான திரைகதை,அருமையான காமெடி,நல்ல நடிகர் நடிகை இப்படி எல்லாம் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.

பொதுவாக பிரபல நடிகர்களின் படத்தை தவிர சிறிய நடிகர்களின் படத்திற்கு அவ்வளவாக விசில் சத்தம் கைதட்டல் இப்படி எதுவும் இருக்காது. ஆனால் அதையெல்லாம் தாண்டி எல்லோரையும் ரசிக்கவைக்கும் படமாக இருந்தது இந்த மரகதநாணயம். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்ததில் அரங்கமே அதிர்ந்தது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு நகைசுவை படம்.

அரங்கத்துக்கு வரும் அனைவரும் கொடுத்த காசுக்கு சந்தோசமாக போங்க என்று இயக்குனர் உத்திரவாதம் கொடுத்துள்ளார். படத்தில் நாயகன் ஆதி, நாயகி நிக்கிகல்ராணி முக்கிய வேடத்தில் ராமதாஸ், அருண்ராஜா காமராஜ், காளி வெங்கட், டேனியல், ஆனந்தராஜ், கோட்டா ஸ்ரீனிவாசராவ், பிரம்மானந்தம்,எம்.எஸ்.பாஸ்கர், மைம்கோபி மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் ஒளிப்பதிவில் திபு நைணன் தாமஸ் இசையில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆக்ஸ்சஸ் பிலிம் பாக்டரி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் மரகதநாணயம்.

இந்த படத்தின் கதையயை நான் உங்களுக்கு சொன்னால் படம் பார்க்கும் சுவாரிசியம் உங்களுக்கு போய்விடும். இருந்தாலும் இப்படத்தை ஒரு வரிக்கதை மட்டும் சொல்லுகிறேன். மரகதநாணயம் இதை தொடுபவர்களுக்கு மரணம் நிச்சயம். அப்படி ஒரு ஆபத்தாக இருக்கும் அந்த கல்லை எனக்கு எடுத்து தரவேண்டும் என்று ஒரு சீன காரன் மைம்கோபியிடம் கேட்கிறான். மைம்கோபியும் அந்த கல்லை எடுக்க பலரை அணுகுகிறார். ஆனால் யாரும் உயிருக்கு பயந்து முன் வரமாட்டேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம் ஹீரோ பண கஷ்டத்தால் நான் செய்கிறேன் என்று சொல்ல அதற்கான வேளைகளில் இறங்குகிறார்.

அவருக்கு உதவி செய்ய டேனி, காரணம்? அவருக்கு பணத்தின் மேல் உள்ள ஆசை இந்த கல்லை எப்படி எடுக்கிறார்கள் அப்படி எடுக்கும் பொது என்ன நடக்கிறது. என்பதை மிக சுவாரிசசியமாக, காமெடியாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்.இக்கதையில் காட்சிக்கு காட்சி வித்தியாசம் மிக சிறந்த நடிப்பு நடித்த அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ஒரு காட்சிக்கு வரும் காளி வெங்கட் முதல் அனைவரும் நம்மை மிகவும் சிரிக்க வைத்துள்ளனர்.

படத்தின் மிக பெரிய பலம் நிக்கிகல்ராணி என்று தான் சொல்லணும். இந்த கதாபாத்திரத்துக்கு இவரை தவிர மிக சிறந்த நடிகை நிச்சயம் வேறு யாரும் இல்லை,என்று சொல்லலாம். அந்தளவுக்கு மிக சிறந்த நடிப்பு. ஆதி இந்த படத்தில் தான் தன் திறமையை நம்பி நடித்துள்ளார். என்று சொல்லணும் அந்தளவுக்கு ஒரு சிறந்த நடிப்பு அதே போல அவரின் நண்பராக வரும் டேனி படத்தின் மிக பெரிய பலம். இவருக்கான திறமையை வெளிபடுத்தும் ஒரு நல்ல பாத்திரம், கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தியுள்ளார். ராமதாஸ் நல்ல நகைசுவை நடிகர் என்று மீண்டும் நிருபித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த மரகதநாணயம் பிரகாசமாக ஜொலிக்கிறது.

Leave a Response