வேலூர் பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கொடிமரம் திடிரென சாய்ந்தது…

vellor
தென் தமிழகத்தில், திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாளை போல, வடதமிழகத்தில் வேலுர் பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கருதப்படுகின்றது.

வைகுண்டத்தில் பெருமாளுக்கு உதவியாக இருந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதன்முதலாக அவரை தன்னில் சயனிக்க வைத்ததாக தலபுராணம் கூறுகின்றது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இந்த தலத்தை ஒட்டி செல்லும் ஆறுக்கு ‘பாலாறு’ என்று பெயர் ஏற்பட்டது. இந்த தலத்தில் ஒரு நாள் தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகின்றது.

இப்படிப்பட்ட தலபெருமை பெற்ற பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கொடிமரம் நேற்று சூறாவளியால் சாய்ந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Response