இனி இந்தியாவில் ஜெனரல் மோட்டார்சின் கார் விற்பனை கிடையாது…

trax
இந்தியாவில் தொழில் போட்டியை சமாளிக்க, உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக போராடி கொடிருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ். இந்நிறுவனத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை மட்டும் அவர்கலால் பெற முடிந்தது.

இதனால் இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து நடத்தவும், ஏற்றுமதியை தொடரவும் ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஷெவர்லெட் கார்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் விற்பனையை நிறுத்தி விட்டு, இந்தியாவில் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இருந்தும் இந்தியாவில் விற்பனை இல்லாவிட்டாலும் இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் எண்ணிக்கை 70,969 என்ற அளவில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

Leave a Response