சிபிஎஸ்இ., நிவகத்திற்க்கு நோட்டீஸ் அனுப்பிய மனிதஉரிமை கமிஷன்…

neet11
மே 7 ம் தேதி நாடு முழுவதும் நீட் எனப்படும் மருத்துவ படிப்பிற்கான பொது தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் உள்ளாடையை அகற்றுமாறு அங்கிருந்த ஆசிரியைகள் வற்புறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெறும் சர்ச்சை ஆக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 2 ஆசிரியைகள் ஏற்கனவே சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மனிதஉரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு மனிதஉரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு டில்லி சிபிஎஸ்இ தலைவருக்கு அந்த நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Response