எம்.ஐ-யின் புதிய ஸ்மார்ட்போன்…

mi
நம்ம ரெட்மி போன் பத்தி தாங்க பாக்க போறோம் என்னதான் சூடாகுது சொல்லி மீம்ஸ் போட்டு கலாய்ச்சாலும். அதுக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கும். இந்த மாதிரி நேரத்துல ஸ்மார்ட்போன் பயன்படுத்தறவங்க கிட்ட ஒரு குறை பொதுவா சொல்லுவாங்க என்னதான் இருந்தாலும் சார்ஜ் அவ்ளோ நிக்க மாட்டுக்கு சொல்லுவாங்க. அதை பூர்த்தி செய்ற மாதிரி ஒரு ஸ்மார்ட்போன் வர போது.

அதவாது ஏற்கனவே கடந்த ஆண்டு எம்.ஐ மேக்ஸ் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட் போனை, ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் அடுத்த வரிசையாக எம்.ஐ மேக்ஸ் 2 என்ற ஸ்மார்ட் போனை ஜியோமி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

மற்ற எம்.ஐ போன்களை விட இந்த எம்.ஐ மேக்ஸ் போனில் இருக்கக் கூடிய முக்கிய சிறப்பம்சம், அதில் உள்ள 5000mAh திறனுடைய பேட்டரிதான். இதனால் இந்த போனை 4 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்து கொண்டால் கூட போதுமானது.

6.44 அங்குல ஹெச்.டி டிஸ்பிளே, குவாட் கோர் ஸ்நாப்டிராகன் 626 பிராசசர், 4 ஜிபி ராம் மற்றும் 34 ஜிபி ரோம் அல்லது 6 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ரோம் ஆகிய சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட் போனில் இருக்கலாம். 12 எம்.பி பின்பக்க கேமிரா, 5 எம்.பி முன் பக்க கேமிரா ஆகியவையும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எம்.ஐ மேக்ஸ் 2 போன் 15,000 ரூபாய்க்குள் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த போன் வரும் 23-ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கு பின்னர் சில காலம் கழித்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Leave a Response