ஒடிசாவில் பிறந்த புலிக்குட்டி….

tiger
நமது ஊரில் இப்பொழுது எங்கு போனாலும் பாகுபலி புகழாரம் தான் பேசப்பட்டு வருகிறது. அதை நிருபிக்கும் வர்ணமாக ஓடிசாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் புலி கூட்டத்திற்கு பிறந்த புலிக்குட்டி பாகுபலி பெயர் இடப்பட்டது.

பூங்காவில் கடந்த சில நாட்கள் முன்பு மூன்று ஜோடி புலிகளுக்கு ஏழு புலிக்குட்டிகள் பிறந்தன. இவைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று குழப்பத்தில் இருந்த. வரும் பார்வையாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதற்காக இரண்டு ஆலோசனை பெட்டிகள் உயிரியல் பூங்காவின் வளாகத்தில் வைக்கப்பட்டன.

இந்த ஆலோசனை பெட்டியில் சுமார் 400 பெயர்களை பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் பாகுபலியின் பெயரை வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே அளவு தேவசேனாவின் பெயருக்கும் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

பார்வையாளர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பூங்கா அதிகாரிகள் நந்தன் மற்றும் மேகா ஆகிய புலி ஜோடிகளுக்கு பிறந்த இரண்டு ஆண் குட்டிகளுக்கு, பாகுபலி மற்றும் குந்தன் என பெயரிடப்பட்டது.
அதனோடு பார்வையாளர்கள் விரும்பிய மற்ற பெயர்கள் மீதமுள்ள ஐந்து புலிக்குட்டிகளுக்கு சூட்டப்பட்டன. பிறந்த புலிக்குட்டிகள் அனைத்தும் ஆண் என்பதால் தேவசேனா பெயர் எந்த புலிக்குட்டிகளுக்கும் வைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஒடிசா வனத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.

Leave a Response