ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை அடித்தே கொன்ற கொடுரம்….

vilupuram

நமது மனிதர்கள் இடையே சொத்து, பணத்தின் மோகம் அதகரித்து வருகின்றது.    இவைகளால் போட்டி போறாமை அதிகரித்து கொலை வரை செல்கிறது.   இதற்கு சான்றாக  விழுப்புரத்தில் கொலை ஒன்று நடந்துள்ளது.

அதாவது என்ன வென்றால்  விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி விநாயகா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜோசப் ரத்தினகுமார் (63).   இவருக்கு ரோஸ்லின் ஆனந்தி (55) என்கிற மனைவியும், டேனியல் (27) என்கிற மகனும், பிரைட்டி (21) என்கிற மகளும் உள்ளனர்.

ஜோசப் ரத்தினகுமாருக்கும், உறவினரான கருணாபுரத்தைச் சேர்ந்த பெஞ்சமின் (78) என்பவருக்கும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.    மேலும், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த 5–ஆம் தேதி ரோஸ்லின் ஆனந்தி தனது மகன், மகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றார்.   வீட்டில் ஜோசப் ரத்தினகுமார் மட்டும் தனியாக இருந்தார்.

இதற்கிடையே மேட்டுப்பாளையத்தில் இருந்து ரோஸ்லின் ஆனந்தி தனது மகன், மகளுடன் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.   அப்போது ஜோசப் ரத்தினகுமார் ரத்த காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்தததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் காவலாளர்கள் விரைந்து வந்து  ஜோசப்ரத்தினகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரோஸ்லின் ஆனந்தி கொடுத்த புகாரில், “தனது கணவருக்கும், உறவினரான பெஞ்சமினுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.    எனது கணவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பெஞ்சமின் மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்டோர் சேர்ந்து, ஜோசப் ரத்தினகுமாரை அடித்துக் கொலை செய்து விட்டார்” என்று கூறியிருந்தார்.   அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பெஞ்சமின் அவருடைய மகன்கள் அறிவழகன், குமார், இளையராஜா மற்றும் ராமர் மகன் செந்தில், செல்வராஜ் மகன் நித்திராஜ் (25) ஆகிய ஆறு பேரும் சேர்ந்து ஜோசப் ரத்தினகுமாரை ஆட்டோவில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்ததும்.    பின்னர் அவரது உடலை வீட்டு வராண்டாவில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஆறு பேரையும் காவலாளர்கள் வலைவீசி தேடிவந்த நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த நித்திராஜை காவலாளர்கள் கைது செய்தனர்.

இதற்கிடையில் காவலாளர்கள் தேடுவதை அறிந்ததும் பெஞ்சமின் மகன் அறிவழகன் (38), ராமர் மகன் செந்தில் (25) ஆகிய இரண்டு பேரும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மும்தாஜ் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.

அவர்கள் இருவரையும், 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.   இதனையடுத்து தர்மமே வெல்லும் என்ற பழமொழி கேற்ப  இருவரும் கடலூரில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Response