அய்யனார் வீதி- விமர்சனம்

Ayyanar-veedhi-movie-review
படம்- “அய்யனார் வீதி”

திரைகதை
வசனம்
இயக்கம்- ராஜ்குமார் ஜிப்சி, ஒளிப்பதிவு- சக்திவேல், இசை- U.K.முரளி, எடிட்டிங்- சுரேஷ் ஆர்ஸ்,
தயாரிப்பு நிர்வாகம்- கடையன் ராஜு, தயாரிப்பு- p.செந்திவேல்,

நடிகர்கள்- கே.பாக்கியராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன், சார ஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம் புலி, முத்துக்காளை, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாகுபலி 2 படத்தினுடைய வெளியிட்டின் பொழுது நமக்கென்ன என்று தெலுங்கு, ஹிந்தி, திரையுலகினர் தங்களுடையா படங்களை வெளியிடாமல் இருக்க தமிழில் மட்டும் “அய்யனார் வீதி” என்ற திரைப்படம் மட்டும் பாகுபளியுடன் வெளியாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அய்யனார் வீதி என்பது ஊர் பெயர். இந்தபடத்தில் அய்யனாரக பொன்வண்ணனும், சுப்ரமணிய சாஸ்திரிகளாக கே.பாக்கிய ராஜ் அவர்களும் செந்திலக யுவனும் நடதுள்ளனர். இந்த படத்தி யூத்களை பற்றி சொல்ல ஒருவரும் இல்லையா என்று பாக்கிய ராஜ் கட்டதான் பிறகு யுவநை இந்த படத்தில் இயக்குனர் ராஜ்குமார் ஜிப்சி சேர்த்து கொண்டார்.

இப்படிப் படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் இருந்தும், திரைக்கதை எவர் மீதும் பயணிக்காமல் தன்னியல்பில் தேமோவெனச் செல்வதை இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான செந்தில் வேல் இப்படத்தில் மறுத்து எனும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதாநாயகன் யாரென்று க்ளைமாக்ஸ் வரை சந்தேகம் எழுந்தாலும் வில்லன் யாரென்று சந்தேகம் எதுவும் எழவில்லை. இதில் தயாரிப்பாளர் செந்தில்வேல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். இவர் மேலும் நல்ல கதாப்பாத்திரம் அமைந்தாலும் மீண்டும் அவர் நடிக்கலாம். வில்லனான அவர்க்கும் இப்படத்தில் ஒரு குத்து பாடல் உண்டு.

இந்த குத்து பாட்டுகள் இல்லாமல் இருந்திருக்கலாம். செந்தில்வேலுக்கும் இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார் ஓர் அதகளமான சண்டை கட்சி வருகிறது. இந்த சண்டைகட்சியில் ஜிப்சி ராஜ்குமார் திடிரென எங்கிருந்து வந்தார் என்பது தெரியவில்லை.

படத்தில் சாரா ஷெட்டி, சிஞ்சு மோகன் என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். ஒருவர் நாயகனால் காதலிக்கப்பட, மற்றொருவர் நாயகனைக் காதலிக்க. ஆனால், திணிக்கப்பட்ட யுவன் படத்திற்குச் சற்றும் பொருந்தாமல் போவது துரதிர்ஷ்டம். காமெடியனான சிங்கம்புலியும் மனதில் ஒட்டாமல் மறைகிறார். இசையமைப்பாளர் U.K.முரளி படத்தின் நாடகத்தன்மையைப் பூதாகரப்படுத்திக் காட்டியுள்ளார்.

க்ளைமேக்ஸில் அய்யனாராய் ரெளத்திரம் கொள்கிறார் பாக்யராஜ். ஆனால், அதற்கான நியாயத்தை திரைக்கதை கற்பிக்காததால் அக்காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது. பொன்வண்ணனுக்கும் பாக்கியராஜுக்குமான நட்பை இன்னும் காவியத்தன்மையோடு மிளிர விட்டிருக்கலாம் இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார்.

Leave a Response