வோடபோன் வழங்கும் 4ஜிபி இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி…

vodafone-4g
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் இன்னமும் 4ஜி நெட்வொர்க்கில் இணையாமல் இருப்பவர்களுக்கு என புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி வோடபோன் 4ஜி நெட்வொர்க்கிற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி அளவு இலவச 4ஜி டேட்டா வழங்க வோடபோன் முடிவு செய்துள்ளது.

4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப்படும் இலவச டேட்டா சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வசிப்போர் உடனடியாக வோடபோன் 4ஜி நெட்வொர்க்கில் இணைந்தால் இலவசமாக 4ஜிபி அளவு கொண்ட 4ஜி டேட்டாவை பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை மூலம் 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வோடபோன் முடிவு செய்துள்ளது. புதிய வோடபோன் 4ஜி சிம் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வோடபோன் ஸ்டோர், வோடபோன் மினி ஸ்டோர் மற்றும் மும்பை வட்டாரங்களில் இயங்கி வரும் வோடபோன் விற்பனை மையங்களில் பெற முடியும்.

முதலில் வோடபோன் சிம் கார்டு ஒன்றை வாங்க வேண்டும்.

* இனி 4ஜி சிம் கார்டை ஆக்டிவேட் செய்ய, ஏற்கனவே இருக்கும் வோடபோன் எண் கொண்டு ‘SIMEX ‘ என டைப் செய்து 55199 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

* எஸ்எம்எஸ் அனுப்பியதும், வோடபோன் சார்பில் பதில் அனுப்பப்படும்.

* அடுத்து உங்களது புதிய சிம் கார்டின் கடைசி ஆறு எண்களை 55199 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். குறிப்பு: இந்த ஆறு எண்களையும் முந்தைய வழிமுறையில் கூறப்பட்ட எஸ்எம்எஸ் வந்த 2 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும்.

* ஆறு எண்களை அனுப்பியதும் உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் எஸ்எம்எஸ் வரும், இனி 20 நிமிடங்களில் உங்களது 4ஜி சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

* புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆனதும் அதனை ஸ்மார்ட்போனில் பொருத்தி 4ஜி சேவைகளை பயன்படுத்த துவங்கலாம்.

Leave a Response